சீனாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கையால்... பெருத்த 'நஷ்டம்' அமெரிக்காவுக்கு தான்... கலங்கிப்போன முன்னணி நிறுவனம்... காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இடையேயான முட்டல், மோதல், உரசல்கள் தற்போது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதற்கிடையில் இந்தியாவை பின்பற்றி சீன செயலிகளை அமெரிக்காவில் தடை செய்திருக்கிறார் டிரம்ப்.
அடுத்த 45 நாட்களில் இந்த தடை அமலுக்கு வரும் என டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக சீன செயலிகளான டிக் டாக், வீசாட் ஆகியவை டிரம்பின் தடை பட்டியலில் இருப்பதால் இது அமெரிக்காவுக்கு தான் மிகப்பெரும் நஷ்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் போன்கள் சீனாவில் பெரியளவில் விற்பனை ஆகின்றன.
இந்த தடை உத்தரவால் சீனாவில் ஆப்பிள் போன்கள் விற்பனை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சீனர்கள் வீசாட் செயலியை பணப்பரிவர்த்தனை செய்ய அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் போனில் இந்த செயலி தடை செய்யப்பட்டால் அவற்றை வாங்க யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என ஆப்பிள் நிறுவனம் அஞ்சுகின்றது.