'இந்த எல்லைய தாண்டி நீயும் வரக் கூடாது...' 'நானும் வரமாட்டேன்...' 'ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல...' அப்படி என்ன பண்றாங்க...? - வியக்க வைக்கும் கேரள கிராமம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒரு கிராமத்திற்குள் மட்டும் கொரோனா வைரஸ் நுழையாத சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 40,000-ஐ தொட்டு வரும் நிலையில், ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
கொரோனா இல்லாத பசுமையான மாவட்டமாக இடுக்கி எடமலக்குடி என்ற பழங்குடி கிராமம் திகழ்கிறது. இதற்கு காரணம் அங்கிருக்கும் கிராம மக்கள் தங்களுக்காகவே சுயமாக லாக் டவுன் விதிப்பது, வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, கிராமத்தில் விளைவித்த உணவுப் பொருட்களை மட்டும் உண்பது போன்றவற்றை கடைபிடித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அங்கிருக்கும் சூழலில் கிடைக்கும் தூய்மையான காற்று.
அங்கிருக்கும் சூழல் குறித்து பி கே ஜெயஸ்ரீ என்பவர் கூறிய போது, 'மூணாரின் வனப்பிரிவுக்குள் அமைந்துள்ள இந்த எடமலக்குடி கிராமம் கிட்டத்தட்ட 3,000 பேர் வசிக்கின்றனர்.
சென்ற வருடம் ஆகஸ்டில் இந்த கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கிராமத்துக்கென இருந்த சாலைகளின் இணைப்புகளை துண்டித்துவிட்டது. இதனால் இயற்கையாகவே தனித்துவிடப்பட்டது போல் இந்த கிராமம் அமைந்துவிட்டது
அதன்பின் கொரோனா வைரஸ் பரவியப்போது உள்ளூர் பஞ்சாயத்து ஒரு கூட்டம் கூட்டி இப்பகுதியில் தங்களுக்காகவே ஊரடங்கு போட்டுக்கொண்டனர்.
அதேபோல வெளியூரில் இருந்து வருபவர்களும் தனிமையில் இருந்த பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்ற தற்காப்பு பொருட்களும் அவர்கள் மத்தியில் புழக்கத்துக்கு விடப்பட்டன' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
