இவரு 'எந்த' ஹீரோவோட 'டூப்' தெரியுதா...? இவருக்கா இந்த நிலைமை...! 'இப்படியே விடக்கூடாது என...' - நெட்டிசன்கள் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர்களுக்கு டூப்பாக நடிக்கும் தொழிலாளிகள்.
காரணம் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல், உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள். மேலும் ஹீரோ இரட்டை வேடம் என்றால் பெரும்பாலும் டூப்பாக நடிப்பவர்கள் ஸ்டண்ட் கலைஞர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் நடிகர்களின் சண்டைக்காட்சிகள்தான் அவர்களுக்கான வாழ்க்கை ஓடுவதற்கு முக்கிய காரணம். ஆனால் எப்போதும் இவர்களுக்கு பணி இருக்கும் என சொல்ல முடியாது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கிடைக்கிற வேலைகளை செய்து குடும்பத்தை நடத்துவார்கள். அதேபோன்று, இணையவாசிகளால் தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்ட நபர் பெயர் தான் ராஜன் கோயிலாண்டி.
இவர் மலையாளத்தில் மோகன்லால், வசுந்தரா தாஸ் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த 'ராவணபிரபு' என்கிற வெற்றிப்படத்தில் மோகன்லாலுக்கு டூப்பாக நடித்தவர். இப்படத்தில் மோகன்லால் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
மாலிவுட்டில் சுமார் 30 வருடங்களாக இந்த ராஜன் கோயிலாண்டி உதவி கலை இயக்குனராக பணிபுரிகிறார். அந்த பனியின் மூலம் நிறைய சிரமங்களுடன் தினசரி வாழ்வை கழிப்பதற்கு உதவியாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவை அலற விட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு சினிமா உலகை பெரும் பாதிப்புக்குள் ஆக்கியது. இதில் ராஜன் கோயிலாண்டியையும் விட்டுவைக்கவில்லை. இதனால் வேலை இழந்த ராஜன் பிழைப்புக்கு வழியில்லாமல் தனியார் மது பார் ஒன்றில் செக்யுரிட்டியாக பணிக்குச் சேர்ந்து சில மாதங்களாக வேலை செய்து வருகிறார்.
விஷயத்தை கேள்விப்பட்ட சினிமா துறையை சேர்ந்த சிலர், அவர் தற்போது இருக்கும் நிலைமையை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர், அதை கேரள நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து மக்களிடம் உதவி கேட்டு வருகின்றனர்.
இது குறித்து மலையாள செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள ராஜன் கோயிலாண்டி, 'சினிமாவில் இருப்பவர்களுக்கு அந்த தொழில் நிரந்தரமான ஒன்றாக இருக்க முடியாது. எனவே நமக்கு அடுத்த வேளை உணவு வேண்டும் என்றால் நாம் எந்த வேலையும் பார்க்க தயங்கக்கூடாது. எனவே தான் செக்யூரிட்டி வேலையில் சேர்த்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.