VIDEO: ‘பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாரு’!.. கண்ணீர் விட்டு அழுத யானை.. காண்போரை கலங்க வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாகனைப் பார்த்து அவர் வளர்த்த யானை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஓமன சேட்டன் என்ற தாமோதர நாயர் (74 வயது), கடந்த 25 ஆண்டுகளாக பிரம்மதேத்தன் என்ற யானையை சிறுவயதில் இருந்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறையால் நேற்று ஓமன சேட்டன் உயிரிழந்தார். இவரது உடலுக்கு அவரது உறவினர்கள் வீட்டில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் குழந்தைபோல் பார்த்துக்கொண்ட யானை பிரம்மதேத்தன், பாகனுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தது. 25 ஆண்டுகாலம் தந்தைபோல் வளர்த்த பாகன், உயிரிழந்து சடலமாக கிடைந்ததைப் பார்த்த யானை கண்ணீர் விட்டு அழுதது. அங்கிருந்து செல்ல மனமில்லாமல், கண்ணீருடன் தும்பிக்கையை தூக்கி பாகனுக்கு அஞ்சலி செலுத்தியது.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பாகனின் பிரிவை தாங்க முடியாமல் கண்கலங்கிய யானையின் செயல் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
