VIDEO: எத்தனையோ சந்தோசமான நினைவுகள் 'அந்த வீட்டுல' நடந்துருக்கும்...! 'இப்படி ஒரே செகண்ட்ல வீடு இருந்த தடமே தெரியாம ஆயிடுச்சே...' - 'டவ் தே' புயலின் கோரத்தாண்டவம் ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் காசர்கோடு அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் ஒரு மாடி வீடு புயல் மழை காரணமாக சரிந்து தரைமட்டமாக விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
![Video of a house collapsing due to Tauktae cyclone in Kerala Video of a house collapsing due to Tauktae cyclone in Kerala](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/video-of-a-house-collapsing-due-to-tauktae-cyclone-in-kerala.jpg)
கேரளாவில் 'டவ் தே' புயல் கோரத்தாண்டவத்தை காட்டியிருக்கிறது. இந்த புயலினால் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் பல மரங்கள் சாய்ந்து வருகிறது. இதனால் மின்தடை போன்றவை ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரள எல்லையான குமரி மாவட்டத்திலும் புயலின் தாக்கம் காணப்படுகிறது.
இந்தநிலையில் மூசோடு கடற்கரைப்பகுதியில் உள்ள வீட்டில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகள் வசித்து வந்தனர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர்.
தற்போது, தாங்கள் ஆசை ஆசையாக வாழ்ந்த அந்த வீடு புயல் மழை காரணமாக ஒரே நிமிடத்தில் தரைமட்டமாக சரிந்து கீழே விழுந்து மண்ணோடு மண்ணானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)