என்னங்க சொல்றீங்க..! கொச்சி அருகே கடலுக்கு அடியில் புதிய தீவு..? கூகுள் மேப்பால் வெளிவந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு தீவு இருப்பதுபோல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் போட்டோவில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Google Maps show new underwater structure in Arabian Sea near Kochi Google Maps show new underwater structure in Arabian Sea near Kochi](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/google-maps-show-new-underwater-structure-in-arabian-sea-near-kochi-1.jpg)
கேரள மாநிலம் கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு தீவு இருப்பது கூகுள் மேப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தீவு வானில் இருந்து பார்ப்பதற்கு பீன்ஸ் போன்ற வடிவில் உள்ளது. சுமார் 8 கிலோமீட்டர் நீளமும், 3.5 கிலோமீட்டர் அகலமும் கொண்டுள்ள இந்த தீவு, கிட்டத்தட்ட மேற்கு கொச்சியின் 50 சதவிகித நிலப்பரப்புக்கு சமம் என சொல்லப்படுகிறது.
இது செல்லனம் கர்ஷிகா சுற்றுலா மேம்பாட்டு கழகம் என்ற சங்கத்தின் மூலம் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைகழகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து பல்கலைக்கழக வல்லுனர்கள் குழு அமைத்து, இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பகுதி கடலுக்குள் மூழ்கி இருக்கும் கட்டட அமைப்பாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் எதுவாக இருந்தாலும் ஆய்வின் முடிவிலேயே தெரியவரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடலுக்கு அடியில் தீவு இருப்பதுபோல் கூகுள் மேப்பில் காட்டிய தகவல் வெளியாகி, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)