சத்தம் போட்டு சிரிச்ச ஆனந்த் மஹிந்திரா.. "அதுக்கு அவங்க மனைவி ரியாக்ஷன் இது தான்.." வைரலாகும் தொழிலதிபரின் 'ட்வீட்'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
![anand mahindra took a minute to laugh after look on a meme anand mahindra took a minute to laugh after look on a meme](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/anand-mahindra-took-a-minute-to-laugh-after-look-on-a-meme.jpg)
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்த நிலையில், தற்போது மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில், இரண்டு கிளாசில் ஜுஸ் இருக்கும் புகைப்படம் உள்ளது.
அதன்படி, முதல் கிளாசில் ஜூஸ் மற்றும் ஐஸ்கட்டிகளும் உள்ளே இருந்தது. அதன் அருகே, 'Juice' என இருந்தது. அதன் கீழ் உள்ள புகைப்படத்தில், ஐஸ் கட்டிகள் இல்லாமல், ஜூஸ் மட்டும் இருந்தது. அதன் பக்கத்தில், 'Ju' என இருந்தது. அதாவது இரண்டாம் புகைப்படத்தில், 'ice' இல்லை என்பதை குறிக்கும் விதமாக தான், வேடிக்கையாக 'Ju' என இருந்தது.
இந்த புகைப்படத்தினை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தனது கேப்ஷனில், "வார இறுதியில், வெள்ளிக்கிழமை என்பதால், என் மனதும் சற்று மெதுவாக இருந்துள்ளது. ஏனென்றால், இதிலுள்ள நகைச்சுவையை பெற எனக்கு ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டது. அப்படி எனக்கு புரிந்ததும், நான் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தேன். அதனை கேட்டு, என் மனைவி ஏறக்குறைய நாற்காலியில் இருந்து விழும் அளவுக்கு போனார்" என வேடிக்கையாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் மற்ற பதிவுகள் போல, இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | 20 ரூபாயால் தொடரப்பட்ட வழக்கு.. "சுமார் 22 வருசத்துக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு.!!"
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)