லவ்... லிவிங்.. டாட்டூ என பரவசமாய் போய் 13 நாளில் முடிவுக்கு வந்த பரபரப்பு காதல்.!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலித்து லிவிங் டுகெதரில் வாழத் துவங்கிய 13 வது நாளில் பிரேக்கப் செய்திருக்கிறது ஒரு தம்பதி.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் டெரன்ஸ் க்ரீன். 23 வயதான இவர் ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக கனடாவின் டொராண்டோ பகுதியை சேர்ந்த அலிசா தாமஸ் என்பவரை சந்தித்திருக்கிறார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிவந்த நிலையில் இருவருக்குள்ளும் காதல் அரும்பியிருக்கிறது. இதனிடையே க்ரீனை சந்திக்க கனடாவில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு வந்திருக்கிறார் அலிசா. இருவரும் பரஸ்பரம் தனது காதலை வெளிப்படுத்தவே, க்ரீன் அந்த பெண்ணுடன் சேர்ந்துவாழ முடிவெடுத்திருக்கிறார்.
டாட்டூ
இதனையடுத்து, தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக அலிசாவின் பெயரை தனது கழுத்தில் டாட்டூ போட்டுள்ளார் க்ரீன். அதன் பின்னர் அலிசாவுடன் இணைந்து வாழ முடிவெடுத்த க்ரீன் கனடாவிற்கு பயணித்திருக்கிறார். அங்கே அலிசாவை சந்தித்த க்ரீன் இருவரும் ஒன்றாக வாழ்வோம் என கூறியுள்ளார். அதற்கு அலிசாவும் சம்மதிக்கவே இருவரும் ஒரே வீட்டில் வசிக்க துவங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு பிரச்சனை நண்பர்கள் மூலமாக வந்திருக்கிறது.
ஆரம்பத்தில், க்ரீனுடன் வசித்துவந்த அலிசாவை பல்வேறு விதத்தில் காயப்படுத்தியிருக்கிறார்கள் அவரது நண்பர்கள். இதனால் தினமும் க்ரீனிடம் இதுகுறித்து பேசி கண்ணீர் சிந்தியுள்ளார் அலிசா. அப்போது அந்த நண்பர்களை விட்டு விலகும்படி கூறியுள்ளார் க்ரீன். ஆனால், அவரால் நண்பர்களை விட்டு வரமுடியவில்லை.
குழந்தைகள்
இந்நிலையில், குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் க்ரீன், அலிசாவிடம் கூறியுள்ளார். ஆனால், நண்பர்களால் ஏற்பட்ட சிக்கல் கைமீறி போயிருக்கிறது. தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு க்ரீன் சமூக வலை தளங்களில் செயல்படுவதாக அலிசாவின் நண்பர் ஒருவர் தெரிவிக்க பிரச்சனை பெரிதாயிருக்கிறது. இதனையடுத்து, அந்த நண்பர்களை விட்டு விலகுமாறு அலிசாவிடம் மீண்டும் கூறியுள்ளார். ஆனால், இந்த முறையில் அலிசா அதனை கேட்காததால் பிரேக்கப் செய்திருக்கிறார் க்ரீன்.
ஒன்றாக வாழ துவங்கிய 13 ஆம் நாளில் பிரேக்கப் செய்ததற்கு அலிசாவின் நண்பர்களே காரணம் எனக் கூறும் க்ரீன், சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இவருடைய சமூக வலை தல பதிவுகள் சென்சேஷனலாக பரவி வருகிறது.
Also Read | "ஆட்டோ ஓட்டுநர் TO முதலமைச்சர்".. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வரான ஏக்நாத் சிங்.. யார் இவர்?