'ஆட்டோ ஹார்ன்', 'லாலி பாப்'ன்னு... 'பிரியங்கா சோப்ரா'வை வித விதமாக மாற்றிய 'நெட்டிசன்கள்'... பதிலுக்கு அவங்களோட ரியாக்ஷன் தான் 'அல்டிமேட்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Feb 24, 2021 04:58 PM

கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

priyankachopra green ball dress changed into memes and she reacts

மிகவும் வித்தியாசமான பேஷன் உடைகளை அணிவதில் அதிக நாட்டமுள்ள பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பச்சை நிற பந்து போன்ற உடை ஒன்றை அணிந்திருந்தார். இந்த உடை தொடர்பான புகைப்படங்களை கையில் எடுத்த நெட்டிசன்கள், வேற லெவலில் அதனை மீம்ஸ்களாக உருவாக்கினர்.

பிரியங்காவின் உடை குறித்து உருவான மீம்ஸ்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகின. பந்து போன்ற உருவத்தில் இருக்கும் பிரியங்காவை, கிரிக்கெட் பந்து போன்றும், லாலிபாப் போன்றும், ஆட்டோ ஹார்ன் போன்றும் வித விதமான ஐடியாக்களாக உருவாக்கி, மீம்ஸ்களாக வெளியிட்டனர்.

 

இந்நிலையில், தனது உடை குறித்த மீம்ஸை கவனித்த பிரியங்கா சோப்ரா, அதில் சிலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த நாளை இனியதாக மாற்றியதற்கு நன்றி' என மீம்ஸ்களை உருவாக்கிய நெட்டிசன்களுக்கு தனது நன்றியையும் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கலாய்த்து உருவாக்கிய மீம்ஸ்களைத் தானே பகிர்ந்து, அதனை உருவாக்கியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ள நிலையில், பிரியங்கா சோப்ராவின் பதிவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Priyankachopra green ball dress changed into memes and she reacts | Tamil Nadu News.