‘அவங்க நமக்கு கடவுள் மாதிரி’.. கொரோனா வார்டில் நடந்த அத்துமீறல்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வார்டில் செவிலியருக்கு ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் அரசு மருத்துமனையில் கொரோனா வார்டு அமைந்துள்ளது. அங்கு செவிலியர் ஒருவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது நோயாளியுடன் இருந்த நபர் ஒருவர் திடீரென செவிலியருக்கு முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அந்த நபரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போதும் அந்த நபர் செவிலியரிடம் அத்துமீற முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கொரோனா வார்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர் விஜய்குமார் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் தன்னலம் கருதாது சேவை செய்து வரும் செவிலியரிடம் இதுபோல் அத்துமீறியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
