'கோவாக்சின்' போட்டவங்களுக்கு 'கிரேட்' நியூஸ்...! 'இது உண்மையாவே மிகப்பெரிய அங்கீகாரம்...' - உச்சகட்ட மகிழ்ச்சியில் பாரத் பயோடெக் நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது வரைக்கும் 48 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு டோஸ்களை போட்டபின்பு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் அளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸிற்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக அண்மையில் இரண்டு ஆய்வு முடிவும் வெளிவந்தது. ஆயினும், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப் பெறவில்லை.
டெல்டா பிளஸ் வைரஸிற்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹங்கேரி நாட்டின் சிறந்த தயாரிப்புக்கான அங்கீகாரம் கிடைததுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவாக்சின் தடுப்பூசியின் மேலும் ஒரு மைல்கல்லாக ஹங்கேரியிடம் இருந்து சிறந்த தயாரிப்பு என்ற சான்றிதழை பெற்றுள்ளது. இது EUDRAGDMP என்ற ஐரோப்பிய சமூகத்திடமிருந்து பெற்ற சிறந்த உற்பத்திக்கான நற்சான்றிதழ் ஆகும். இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
