'இப்படி இருந்தா எப்படி'?... 'இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை'... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்தது. இது ஒரு புறம் இருக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் ஜூன் 1-ம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானது. தற்போது அந்த எண்ணிக்கை 57 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. எனினும் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
