இந்த 'வேலை'லாம் நமக்கு சரிபட்டு வராது...! 'வேலையை ராஜினாமா பண்ணிட்டு...' 'தம்பதியினர் போட்ட மாஸ்டர் பிளான்...' - ஆஹா... இது அல்லவா சுக வாழ்வு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தம்பதி பயணத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் மூன்று மாதங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி தம்பதிகள் 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து தேனிலவு சுற்றுலாவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு இருவரும் சென்று வந்தனர்.
பயணத்தின் மீது காதல் கொண்ட இருவரும் தங்கள் பயண அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக TinPin Stories என்ற யுடியூப் சேனலை தொடங்கியுள்ளனர்.
பயணம் மேற்கொள்வதற்காகவே இருவரும் தங்களின் முழுநேர வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டிலிருந்தே பணியாற்றும் பகுதி நேர வேலையில் இணைந்துள்ளனர்.
தேனிலவிற்கு பிறகு, காரிலேயே தொலைதூர பயணத்தை மேற்கொள்வது தான் இருவரின் திட்டம். அவர்களின் திட்டப்படி ஹரிகிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி, கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தங்களுடைய ஹூண்டாய் கிரெட்டா காரில் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டனர்.
இவர்களின் முதல் பயணம் திருச்சூரில் இருந்து பெங்களூரு. பின்னர் அங்கிருந்து உடுப்பி. அங்கிருந்து கோகர்னா, ஏலாப்பூர் என ஒரு ரவுண்ட் அடித்துள்ளனர். ஏலாப்பூரில் ஆப்பிரிக்க சித்தி எனப்படும் பழங்குடி இனத்தவருடன் நேரத்தைக் கழித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கோல்ஹாபூர் வழியாக மும்பை, அவுரங்காபாத், பூஜ், ரான் ஆஃப் கட்ச், உதய்பூர், புஷ்கர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், காஷ்மீர் சென்றுள்ளனர். நடுவே ரிஷிகேஷ், ஹிமாச்சல் பிரதேச கிராமங்கள் என சுற்றியுள்ளனர்.
அக்டோபரில் இருந்து இதுவரை சாலை வழியாகவே சுமார் 10,000 கிலோ மீட்டர்களை கடந்துள்ளனர். தங்களின் இந்த பயணத்திற்கு 2.5 லட்ச ரூபாய் ஒதுக்கியிருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த பணம் செலவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் இந்த கார் பயணத்தில் மிக குறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர், அவை 10 ஆடைகள், குறைந்தபட்ச சமையல் பாத்திரங்கள், ஒரு பக்கெட், ஒரு கப், ஒரு லேப்டாப், 3 தண்ணீர் கேன்கள், கேஸ் சிலிண்டர், ஒரு பர்னர் அடுப்பு போன்ற பொருட்களை மட்டுமே என குறிப்பிட்டுள்ளனர். தங்களின் இரவுகள் பெரும்பாலும் காரிலேயே கழிவதாகவும், சில நாட்களில், இரவு நேரங்களில் பெட்ரோல் நிலையங்களில் காரை பார்க் செய்துவிட்டு அங்கேயே தங்கி காலையில் பெட்ரோல் நிலைய பாத்ரூம்களில் குளித்துவிட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் 30 நாள் பயணமாக திட்டமிடப்பட்ட இந்த பயணம் தற்போது 120 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
