'நெருக்கமான' படங்களால் சர்ச்சை... பிரபல நடிகையின் 'தந்தை'யிடம்... இரண்டரை மணி நேரம் 'போலீஸ்' விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து ஒன்றரை மாதங்கள் கடந்தும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதுவரை போலீசார் பிரபலங்கள் உட்பட சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிச்சத்துக்கு வரவில்லை. பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது தான் காரணம் என்றும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் காதலி ரியா சக்ரபோர்த்தி பிரிந்து சென்றதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல்வேறு யூகங்கள் அடிபடுகிறது.
இதற்கிடையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தையும் இயக்குநருமான மகேஷ் பட்டிடம் மும்பை போலீசார் சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், '' நடிகை ரியா சக்ரபோர்த்தி வழியாக சுஷாந்தை தெரியும். இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன். ரியாவை என்னுடைய ஜிலேபி படத்தில் அறிமுகப்படுத்தினேன். அதனால் அவர் என்னை குருவாக பார்க்கிறார்,'' என தெரிவித்து இருக்கிறார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நீண்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
