'வாடகைக்கு இருப்பவருக்கு கொரோனா'... 'வீட்டு ஓனர் செஞ்ச பகீர் செயல்'... 'வாடகைக்கு இருந்தா என்ன வேணாலும் செய்வீங்களா'... சீறிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா போன்ற இக்கட்டான நேரங்களில் தான் நாம் மற்றவர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருக்க வேண்டும். பலரும் பல மனிதாபிமான செயல்களைச் செய்து வரும் நிலையில், சிலர் மனிதத் தன்மையின்றி நடந்து கொள்வதும் அங்கங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்ட்டூரில், சட்டெனபள்ளி பகுதியில் 28 வயது வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரின் தாயாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து வீட்டிற்கு வந்த அந்த இளைஞர் வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு அருகில் சென்று தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நீங்களும் தகுந்த பாதுகாப்போடு இருங்கள், என்று கூறிவிட்டு அருகில் வசிப்பவர்களிடமும் பாதுகாப்பாக இருங்கள் எனச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனிடையே அந்த இளைஞரைப் பின்தொடர்ந்து வந்த அந்த வீட்டின் உரிமையாளர், அந்த இளைஞர் வீட்டிற்கு உள்ளே சென்றதும், அவரையும், அவரின் தாயாரையும் வீட்டிற்கு உள்ளே வைத்து வெளியில் பூட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், கதவைத் திறந்து விடுங்கள் என பலமுறை சொல்லியும் கேட்காமல் வீட்டின் உரிமையாளர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார். என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த அந்த இளைஞர், செல்ஃபி வீடியோ மூலமாக தனக்கு நடந்த சம்பவங்களைப் பதிவு செய்து போலீசாருக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்த போலீசார் உடனடியாக அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்து வந்து அந்த இளைஞரையும், அவரது தாயாரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட வீட்டு உரிமையாளரைக் கடுமையாக எச்சரித்த போலீசார், வாடைக்கு ஒருவர் குடி இருந்தால் அவர்கள் உங்கள் அடிமை இல்லை.
இதுபோன்று நடந்து கொள்ள உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து வாடகைக்குக் குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
