காத்திருக்கும் அரசு நாற்காலிகள்!.. விவசாயக் குடும்பத்தில் பிறந்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் செய்த அசாத்திய சாதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநில அரசின் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (ஆர்.பி.எஸ்.சி) ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்ஏஎஸ்) 2018 தேர்வு இறுதி முடிவை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ (rpsc.rajasthan.gov.in) இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் சர்மா இரண்டாம் இடத்தையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிவாட்சி கண்டால் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 2023 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இப்போது மாநிலத்தின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படுவார்கள். இதற்கிடையே, முதலிடம் பிடித்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த தேர்வில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மூன்று மகள்கள் வெற்றி பெற்று உள்ளனர். ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனுக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்று பணியில் உள்ளனர். தற்போது மற்ற மகள்களான அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகிய மூவரும் இதே தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.
இதுகுறித்து பர்வீன் கஸ்வான் டுவீட் செய்துள்ளார். அதில், "இது ஒரு நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் ஒன்றாக ஆர்.ஏ.எஸ்.-இல் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்ஏஎஸ் அதிகாரிகள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
Such a good news. Anshu, Reetu and Suman are three sisters from Hanumangarh, Rajasthan. Today all three got selected in RAS together. Making father & family proud. pic.twitter.com/n9XldKizy9
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 14, 2021
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருவதோடு அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.