“மோசமானவன்னு சொன்னாங்க.. நான் வாய் தொறக்காம இருந்தது..” மனைவியின் குற்றச்சாட்டு.. மௌனம் கலைத்த நவாஸுதீன் சித்திக்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 06, 2023 04:01 PM

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் நவாஸுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி இருந்த பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Nawazuddin Siddiqui breaks silence on controversy with wife and kids

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒரே ஒரு போட்டி தான்.. Crush ஆகவே மாற்றிய ரசிகர்கள்".. இணையத்தை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை..

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பு நவாஸுதீனின் மனைவி ஆலியா, நவாஸுதனின் பங்களாவுக்கு குழந்தைகளுடன் செல்ல முற்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் வெளியில் அனுப்பப்பட்டதாகவும் வீடியோ ஒன்றை பகிர்ந்தது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

தன் கையில் பணம் இல்லை என்றும் குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் எங்கே போவேன், வேறு இடமில்லை என்றும் வேதனையுடன் அந்த வீடியோவில் ஆலியா குறிப்பிட்டு இருந்த விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. ஏற்கனவே ஆலியா மற்றும் நவாஸுதீன் ஆகியோர் விவாகரத்து செய்த சூழலில் தங்களின் குழந்தைகளுக்காக சில புரிதலுடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nawazuddin Siddiqui breaks silence on controversy with wife and kids

Images are subject to © copyright to their respective owners.

நவாஸுதீன் சித்திக் வெளியிட்ட அறிக்கை

இந்த நிலையில், தனது மனைவியின் குற்றச்சாட்டிற்கு நடிகர் நவாஸுதீன் சித்திக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நான் அமைதியாக இருந்ததால் எங்கும் மோசமானவன் என அறியப்பட்டேன். நான் அமைதியாக இருந்ததற்கு காரணம், இப்படிப்பட்ட தமாஷ் எல்லாம் சிறிய குழந்தைகள் கூட கவனிப்பார்கள் என்பதால் தான்.

சமூக வலைத்தளங்கள், ஊடகம் மற்றும் ஏராளமான மக்கள் அனைவரும் என்னுடைய குணத்தை ஒரு தரப்பிலான மற்றும் Manipulated வீடியோக்கள் அடிப்படையில் ரசித்து வருகின்றனர். நான் சில விஷயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

Nawazuddin Siddiqui breaks silence on controversy with wife and kids

Images are subject to © copyright to their respective owners.

குழந்தைகளுக்காக தான்..

நானும் ஆலியாவும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து வாழவே இல்லை. நாங்கள் ஏற்கனவே விவாகரத்து பெற்று விட்டோம். ஆனால், எங்களது குழந்தைகள் காரணமாக எங்களுக்கிடையே நல்ல புரிதல் உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக குழந்தைகளை துபாயில் தனியாக விட்டுவிட்டு தற்போது பணத்தை கேட்பதற்காக இங்கே அழைத்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதத்திற்கு பத்து லட்ச ரூபாயை மனைவி பெற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய மூன்று திரைப்படத்திற்கு நான் பைனான்ஸும் செய்துள்ளேன் அது கோடிக்கணக்கில் மதிப்புள்ளது.

எனது குழந்தைகளுக்காக மும்பையில் கடலை நோக்கி இருக்கும் ஒரு சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கி இருந்தேன். அதனையும் குழந்தைகள் சிறிய வயதுடையவர்கள் எனக்கூறி அதன் இணை உரிமையாளராக ஆலியா மாறி இருந்தார். எனது குழந்தைகளுக்காக துபாயில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி உள்ளேன், அங்கேயும் அவர் வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.

Nawazuddin Siddiqui breaks silence on controversy with wife and kids

Images are subject to © copyright to their respective owners.

பணத்துக்காக தான் இப்படி..

இருந்தும் அவருக்கு அதிக பணம் வேண்டும் என்பதால் எனது பெயரிலும், எனது தாயின் பெயரிலும் வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். இதற்கு முன்பும் அவர் இப்படித்தான் செய்தார். அப்போது நல்ல பணம் கொடுத்த பிறகு அந்த வழக்கிலிருந்து திரும்ப பெற்றுக் கொண்டார்.

என்னோட நற்பெயரை கெடுக்கணும்..

எனது குழந்தைகள் இந்தியா Vacation வரும் போது அவர்கள் பாட்டியுடன் தான் தங்கிக் கொள்வார்கள். அப்படி இருக்கும் போது, வீட்டிலிருந்து எப்படி அவர்களை வெளியேற்ற முடியும். நான் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை. அனைத்திற்கும் வீடியோ எடுக்கும் ஆலியா ஏன் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியதை வீடியோ எடுக்கவில்லை. அவரது இந்த நாடகத்தில் குழந்தைகளையும் உட்படுத்தி என்னை மிரட்டி பார்க்கிறார். எனது நற்பெயரை கெடுத்து என்னுடைய கரியரையும் அழித்து முறையற்ற கோரிக்கைகளை அடைய பார்க்கிறார்.

நான் தற்போது சம்பாதிக்கும் அனைத்துமே என்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக தான். அது யாராலும் மாற்ற முடியாது. நான் சோரா மற்றும் யானி (பிள்ளைகள்) ஆகியோரை நேசிக்கிறேன். நான் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எந்த ஒரு இலக்கும் போவேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை நான் வைத்துள்ளேன். அன்பு என்பது ஒருவரை தடுத்து நிறுத்துவது அல்ல, ஒருவரை சரியான பாதையில் பறக்க வைப்பது தான்" என தனது அறிக்கையில் நடிகர் நவாஸூதீன் சித்திக் குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | "Kids எல்லாம் புடிச்சுட்டாரு"... தோசைல கலையை கலந்து ஊத்திய சமையல் கலைஞர்.. சபாஷ் போட வைத்த வீடியோ!!

 

Tags : #NAWAZUDDIN SIDDIQUI #WIFE

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nawazuddin Siddiqui breaks silence on controversy with wife and kids | India News.