“லாக்டவுன்ல எங்க போறீங்க?”.. கண்டித்த காவலருக்கு நேர்ந்த கொடூரம்.. காரில் வந்த அட்டூழிய கும்பலின் வெறிச்செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 12, 2020 08:06 PM

மே மாதம் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்தில் போலீஸார், காய்கறி மார்க்கெட்டில் கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

punjab cops hand chopped 2 injured in an attack during lockdown

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டம், பால்பேரா கிராமத்தில் உள்ள காய்கறி மண்டி பகுதியில் போலீஸார் இவ்வாறு பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த, நிஹாங்கியர்கள் என்கிற மதப்பிரிவின் பாரம்பரிய உடையை அணிந்த கும்பல் போலீஸாரின் தடுப்பு மீது மோதியதை அடுத்து போலீஸார் அவர்களை விசாரிப்பதற்காக தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு நேரத்தில் கும்பலாக செல்லக் கூடாது என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த கும்பல் கத்தியுடன் இறங்கி போலீஸாரின் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர். இதில் 2 போலீஸார் காயமடைந்தனர். இதனிடையே ஒரு காவலரின் கையை அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் அந்த கும்பல் பதுங்கியிருந்த பால்பேரா கிராமத்துக்குச் சென்ற போலீஸார் அவர்களை

கூண்டோடு கைது செய்தனர்.  இதனிடையே கைவெட்டுப்பட்ட போலீஸாருக்கு மருத்துவமனையில் அறுவை  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.