சிலிண்டர் வெடித்து விபத்து... "சுவர் இடிஞ்சு விழுந்தது'ல"... 'அதிகாலை'யில் நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த சிலிண்டர் வெடி விபத்து ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அங்குள்ளவர்களை மீட்க வேண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலில், இன்று காலை ஆறு மணியளவில், அந்த கட்டிடத்தில் உள்ள மகிந்திரா என்பவரின் வீட்டில் இருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகியுள்ளது. இது அருகிலுள்ள வீட்டில் பரவிய போது, அங்குள்ளவர்கள் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
