'தனியார்' மருத்துவமனையில் 'பணிபுரியும்' 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவாகி, உலகம் முழுவதும் கடைவிரிக்கத் தொடங்கியது கொடூர கொரோனா வைரஸ். மருந்து மாத்திரைகள் எதுவும் இந்த கொடிய, புதிய வைரஸை எதிர்க்க உதவாததாலும், உருவாக்கப்படாததாலும், ஊரடங்கும், தனி மனித இடைவெளியும், சோப்பு போட்டு கைகழுவுதலுமே கண்முன் இருக்கும் தடுப்புமுறைகளாக உள்ளன.
ஆனால் மருத்துவர்களின் தியாகம் உலகளவில் பெரிதாக பார்க்கப்படுகிறது. தங்களுக்கு முறையான உபகரணங்கள் சரிவர கிடைக்கப்பெறாவிடினும், தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டும், கொரோனாவுக்கு எதிரான மனித போராட்டத்தின் முக்கிய வாரியர்களாகவும் மாறிப்போயுள்ளனர். இந்நிலையில் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பலரையும் வருத்தத்துக்குள்ளாகியதோடு, பலரின் கண்டனத்துக்கும் உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
