'அப்படிலாம் சொல்லக் கூடாது...' நீ என்கூட 'கம்பெனி' கொடுத்தே ஆகணும்...! கணவன் கொடுத்த டார்ச்சர்...' - அதிரடி முடிவு எடுத்த மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 18, 2021 02:44 PM

புதுச்சேரியில் உள்ள பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (28). இவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் வெங்கடேஷ் பாபு என்பவருக்கும், கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.

pudhucherry engineer threatened his wife to drink alcohol.

திருமணத்தின்போது 100 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக ரேவதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ் பாபுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது மனைவியையும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை உருவானது.

ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ரேவதி புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'எனது கணவர் வெங்கடேஷ்பாபு என்னுடைய தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்குமாறு கூறி தொடர்ந்து மிரட்டி வருகிறார். தன்னையும் மது அருந்த சொல்லி வற்புறுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது' என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pudhucherry engineer threatened his wife to drink alcohol. | India News.