'பப்ஜி' மதனின் தோழிகளுக்கும் ஸ்கெட்ச்!.. 'கூண்டோடு காலி ஆகிறது 'MADAN OP' சாம்ராஜ்யம்'!.. காவல்துறை தீவிரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 18, 2021 12:48 PM

'பப்ஜி' மதன் கைதான நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

pubg madan arrested police planning to nab his friends

யூடியூப் சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது.

அதையடுத்து, பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், ஐ.டி. சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 509, 294 B உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்த, தமிழக காவல்துறையால் 'பப்ஜி' மதன் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தருமபுரியில் பதுங்கியிருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 'பப்ஜி' மதன் கைதானதை அடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூப் சேனலில் மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pubg madan arrested police planning to nab his friends | Tamil Nadu News.