'என் கணவர் எங்க போனாருன்னே தெரியல...' 'காணமல் போன சுயேச்சை வேட்பாளர்...' - கடைசியில் அதிரடி திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி பகுதியின் சுயேச்சை வேட்பாளர் கோதாவரி ஆற்றில் மயங்கி கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் நடுவே உள்ள ஏனாம் பகுதி புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும். தற்போது தேர்தல் நடைபெறும் சமயத்தில், ஏனாம் சட்டமன்றத் தொகுதியின் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளரான துர்க்கா பிரசாத் பெம்மாடி மாயமாக மறைந்துள்ளார்.
தனது கணவர் கடந்த ஏப்ரல் முதல் நாளில் இருந்து காணவில்லை என துர்கா பிரசாத், மனைவி சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையில் அவரை தேடிவந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர், இன்று கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரை யாராவது கடத்தினார்களா? அவரை யாரேனும் அடித்துத் துன்புறுத்தி ஆற்றங்கரையில் போட்டுவிட்டுச் சென்றனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் சுயேச்சை வேட்பாளர் துர்க்கா பிரசாத்தின் குடும்பத்தாரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
