மட்டன், சிக்கன் என 2500 கைதிகளுக்கு பிரம்மாண்ட விருந்து.. சிறை நிர்வாகத்தின் நெகிழ வைக்கும் முடிவு.. சுவாரஸ்ய பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்குவங்க மாநிலத்தில் சிறை கைதிகளுக்கு மட்டன், சிக்கன் என தடபுடலான விருந்து அளித்திருக்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள். இந்த முடிவு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

துர்கா பூஜை
வட இந்தியாவில் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தாண்டியா, கர்பா நடனங்கள் ஆடியும் இனிப்புகளை பரிமாறியும் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி நாட்களில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் மக்கள் அசைவ உணவுகளையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் சிறையில் இருக்கும் கைதிகளும் துர்கா பூஜையை முன்னிட்டு விருந்து உணவு சாப்பிட அதிகாரிகள் முடிவு எடுத்து இருக்கின்றனர்.
சிறை கைதிகள்
தெற்கு கொல்கத்தாவில் உள்ள Presidency Central Correctional Home எனும் சிறையில் தான் இந்த பிரம்மாண்ட விருந்து நடைபெற்று வருகிறது. இங்கே சுமார் 2500 கைதிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரையில் அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. மஹா அஷ்டமி தினத்தில் (நேற்று) மட்டும் சைவ உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மற்ற தினங்களில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையிலும் விதவிதமான உணவுகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
விருந்து
இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரிகள்,"வங்காளிகள் இந்த சிறப்பு நிகழ்வை அசைவ உணவுகளுடன் கொண்டாடுகிறார்கள். எனவே பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், கைதிகளுக்கு கிச்சூரி, புலாவ், லூச்சி, டம் ஆலு, பனீர் மசாலா மற்றும் நவரதன் கோர்மா போன்ற சைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. அஷ்டமி தினமான அக்டோபர் 3ம் தேதி தவிர, கைதிகள் சாப்பிட ஏராளமான இறைச்சிகள் வழங்கப்பட்டன. இதில் மட்டன் பிரியாணி, மட்டன் காலியா, பல்வேறு வகையான மீன் மற்றும் இறால் உணவு பொருட்கள், ஃப்ரைடு ரைஸ் மற்றும் சில்லி சிக்கன் போன்றவை அடங்கும்" என்றார்.
அதுமட்டும் அல்லாமல், ரசகுல்லா மற்றும் லட்டு ஆகிய இனிப்புகளும் சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பண்டிகை தினங்களில் கைதிகள் சந்தோஷமாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த விருந்து நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். துர்கா பூஜையை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு விதவிதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மற்ற செய்திகள்
