Tiruchitrambalam D Logo Top

ஒரு ஆயுள் மற்றும் 375 வருஷம் சிறை தண்டனை.. அமெரிக்காவையே நடுங்க வச்ச சம்பவம்.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 22, 2022 07:45 PM

அமெரிக்காவில் அதிகாரி ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 375 வருடம் சிறைத்தண்டனை அளித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இது அமெரிக்கா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Man gets life plus 375 years for carnage Georgia officer

Also Read | 5 நாள் அடைமழை வெளுத்து வாங்கப்போகுது.. அதுவும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்குமாம்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!

போன்கால்

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஃபுல்டன் கவுண்டியை சேர்ந்த காவல்நிலையத்தில் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் டெரன்ஸ் கிரீன். கடந்த 2015 ஆம் ஆண்டு, மார்ச் 4 ஆம் தேதி, காவல்நிலையத்துக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் உதவி செய்யும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கிரீன் தனது சக அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

Man gets life plus 375 years for carnage Georgia officer

அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட நபர் கிரீனை சுட அவரது தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து மாகாண உயர் அதிகாரிகள் கிரீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்ட காரணத்தினால் 50 வயதான அமானுவேல் மெங்கேஷா என்பவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவந்தது. அமானுவேல் மெங்கேஷா மீது ஏற்கனவே 30 குற்றவியல் வழக்குகள் இருந்த நிலையில், அவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி ஜேன் பார்விக் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். அதன்படி அமானுவேல் மெங்கேஷாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 375 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Man gets life plus 375 years for carnage Georgia officer

இதுபற்றி பேசியுள்ள தெற்கு ஃபுல்டன் காவல்துறைத் தலைவர் கீத் மெடோஸ்,"இந்த தீர்ப்பு சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு எங்கள் மாநிலத்தில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த கிரீன் மிகச்சிறந்த மனிதர். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்றார். அமெரிக்காவையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் குற்றவாளி அமானுவேல் மெங்கேஷாக்கு ஆயுள் மற்றும் 375 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 'Vacation க்கு இங்க போகணும்னு ஆசை".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அட்டகாசமான வீடியோ.. அடடா இதான் காரணமா.?

Tags : #MAN #PRISON #GEORGIA #COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man gets life plus 375 years for carnage Georgia officer | World News.