'கொரோனாவால் வந்த ப்ரஷரை'.. 'பிஹூ' டான்ஸ் ஆடி குறைக்கும் காவலர்கள்!.. களைகட்டிய 'கண்ட்ரோல் ரூம்!'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 21, 2020 03:07 PM

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பிஹூ நடனத்தை ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Police Perform Bihu Dance at SP office, videoviral

இந்தியா முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில்

மன அழுத்தத்திலும், கொரோனா அச்சத்துடனும் இரவு வெகு நேரமாக பணிபுரிந்துகொண்டு வரும் போலீஸார், தம் பணிகளுக்கிடையே ஒரு மாற்றத்தைக் கருதி  அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை ஆடினர்.

கைகளைத் தட்டி தாளம் போட்டபடி, மெய்மறந்து பரவசமாகவும் உற்சாகமாகவும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர்கள் ஆடிய பிஹூ நடனம், இந்த கொரோனா சூழலிலும் காண்பவர்களுக்கும் ஒரு தன்னம்பிக்கையைத் தருவதாய் அமைந்துள்ளது.