எனக்கு வேற வழி தெரியலங்க...! 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 03, 2021 03:25 PM

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்கு அபராதம் விதித்த போலீசாரிடம், ஒரு பெண் தான் அணிந்திருந்த  தாலியை கழட்டி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police have fined a woman for driving without wearing a helmet.

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்தவர் பாரதி விபூதி (30). இவர் தன்னுடைய கணவருடன், மோட்டார் பைக்கில் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அப்போது இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. 

இவர்கள் தங்களது வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருக்கையில், போக்குவரத்து போலீசார் வரும்வழியில் அவர்களை நிறுத்தினர். ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக, அவர்களுக்கு,போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

தாங்கள் கடையில் வாங்கிய பொருட்கள் போக, தங்களது கைகளில் ரூ.100 மட்டுமே மீதி இருந்தது. கடைக்கு சென்று கழைப்பானதால், அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளனர். எனவே அந்த பணமும் காலியானது.

அபராதம் கட்டிவிட்டு தான் இந்த இடத்தைவிட்டு செல்ல முடியும் என போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து விட்டனர். தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தும் போலீசார், அபராதம் கட்டினால் மட்டுமே, வண்டியை விட முடியும் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

அவர்கள் போலீசாரிடம் கேட்டுப்பார்த்தும் பலன் எற்படாத நிலையில், பாரதி விபூதி திடீரென்று, தான் அணிந்திருந்த தாலியை கழட்டி, அபராத பணத்திற்கு பதிலாக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று ககூறியுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த உயர் அதிகாரி நடந்த சம்பவத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு, அபராதம் எதுவும் வேண்டாம், இனிமேல் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வண்டி ஓட்டுங்கள் என அறிவுரை கூறி அனுப்பினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Police have fined a woman for driving without wearing a helmet. | India News.