'ஒன்லி அந்த பைக் மட்டும் தான் டார்கெட்...' 'வேற எந்த மாடல் பைக்கையும் டச் பண்ணுறது இல்ல...' 'திருட்டுல அப்படி என்ன ETHICS...? - பகீர் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திலீப். இவரின் ஸ்பிளண்டர் பிளஸ் பைக் கடந்த 2 மாதங்களுக்கு முன், காணாமல் போகியுள்ளது.

இதுகுறித்து திலீப் அளித்த புகாரின் பெயரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதைப்போல் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்குகள் கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளிலும் திருடுபோனது.
இதுகுறித்து சந்தேகம் அடைந்த போலீசார் திருட்டு சம்பவம் நடந்த இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான யுவராஜ், தனது கூட்டாளியுடன் சேர்ந்து கைவரிசையை காட்டியது தெரியவந்தது.
அதையடுத்து யுவராஜை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் உடைத்து திருட எளிதாக இருந்ததால், ஸ்பிளண்டர் பிளஸ் ரக வாகனங்களை மட்டும் திருடியதாக யுவராஜ் கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
