'இனிமே தான் எங்க உண்மையான ஆட்டமே இருக்கு'...!!! 'ஐபிஎல் கப் ஜெயிக்காம விடமாட்டோம்'... 'அழகான வீடியோ வெளியிட்டு'... 'உற்சாகப் படுத்திய அணி நிர்வாகம்'...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே ஆஃப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ள டெல்லி அணி, அழகான மோட்டிவேஷ்னல் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 13-வது சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கி கொண்டு திரிந்த அந்த அணி, முதல் நான்கு இடங்களில் ஒரு அணியாக தொடர்ந்து தக்க வைத்து கொண்டது. கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றாலும், தனது கடைசி லீக் போட்டியில் ஆர்சிபியை வெற்றி கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆர்சிபியுடனான வெற்றியையும், பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளதை குறிப்பிடும் வகையிலும், அந்த அணி ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. துபாய் பயணம் துவங்கியதில் இருந்து பல்வேறு நிலைகளில், அணி வீரர்கள் தங்களது மனநிலை மற்றும் பயிற்சிகளை குறிப்பிடும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
வீடியோவின் ஆரம்பத்தில் பிரித்வி ஷா பேசுவதில் துவங்கி, துபாயில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வீரர்களை சந்திப்பது, அணியின் பௌலர் ரபடா, வீரர்களின் கேக் கட்டிங் உள்ளிட்ட பல நிகழ்வுகள் வரை அந்த வீடியோ தொடர்கிறது. இறுதியாக, இனிமேல்தான் உண்மையான போட்டியை எதிர்கொள்ள உள்ளதாகவும், கோப்பையை வெற்றி கொள்வதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும் அணி வீரர்கள் தெரிவிப்பது போன்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள பிளே ஆஃப் போட்டியில் டெல்லி அணி, மும்பை இந்தியன்சுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kaha tha na mahaul banega? 💙
Dilli, #WeRoarTogether with you and the journey has only just begun ✊🏼#Dream11IPL #YehHaiNayiDilli pic.twitter.com/f87iiOD1Yu
— Delhi Capitals (Tweeting from 🇦🇪) (@DelhiCapitals) November 3, 2020

மற்ற செய்திகள்
