"அதிகம் பேர் குணமடைஞ்சது நம்ம 'ஸ்டேட்'ல தான்"... 'அதிரடி' நடவடிக்கைகள் மூலம்... "மாஸ்" காட்டும் 'கேரள' மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 16, 2020 10:05 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் முன்னோடியாக கேரள மாநிலம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மூலம் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் குணமடைந்து வருகின்றனர்.

Number of recovered patients increased in Kerala

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'மாநிலம் முழுவதும் 387 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 218 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். 97,464 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 522 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் கொரோனா நோயாளிகள் குணமடைந்த மாநிலம் கேரளா தான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.