பல வருசமா நிலப் பகுதியில் நிற்கும் விமானம்.. "ஆனா, அந்த ஒரு விஷயம் தான் இன்னும் மர்மமாவே இருக்கு.."
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது, உலகைச் சுற்றி பல இடங்களில் ஏதாவது வினோதமான அல்லது மிகவும் மர்மமான முறையில் ஒரு நிகழ்வு நடந்தால் இணையத்தில் அவை அதிகம் வைரலாகும்.
Also Read | திருநங்கை - திருநம்பி ஜோடிக்கு பிறந்த குழந்தை.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்.. சாத்தியமானது எப்படி??
அந்த வகையில், பாலி பகுதியில் உள்ள விமானம் தொடர்பான செய்தி, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான பாலி பகுதியில், "போயிங் 737" விமானம் ஒன்று நிலப்பகுதி ஒன்றில் பல ஆண்டுகளாக நின்று வருகிறது. Raya Nusa Dua Selatan என்னும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள சுண்ணாம்பு குவாரிக்கான நிலப்பகுதியில், இந்த போயிங் 737 விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் போயிங் 737 விமானம் நிற்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த விமானம் அங்கே எப்படி வந்தது என்பது தான் பலருக்கும் குழப்பமாகவே உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இந்த விமானம் எப்படி அங்கே வந்தது என்பதற்கான காரணங்கள் யாருக்குமே தெரியவில்லை. அதே வேளையில், போயிங் விமானம் பாலி பகுதியில் வந்து சேர்ந்தது தொடர்பாக ஏராளமான கதைகளும் அப்பகுதியில் நிலவி வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்தின் படி, அங்கிருந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர் தான் இந்த போயிங் விமானத்தை அங்கே கொண்டு வந்தார் என்றும், விமானத்தின் பாகங்களை தனித்தனியாக கொண்டு வந்து, அங்கே வைத்து இணைத்து அதனை ஒரு விமானமாக மாற்றினார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விமானத்தை ஒரு ரெஸ்டாரண்ட் ஆக மாற்றவும் அந்த தொழிலதிபர் நினைத்திருந்ததாகவும், போதிய நிதி இல்லாததன் காரணமாக அந்த ஆலோசனையை பாதியிலே அவர் விட்டுவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், அப்பகுதியில் நிலவிவரும் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு சுற்றுலா தளம் போல தோன்றினாலும், இதனை சுற்றி ஒரு வேலி உருவாக்கப்பட்டுள்ளதால், ஒரு தூரத்தில் இருந்து மட்டுமே இதனை பார்க்க முடியும். இந்த போயிங் விமானத்தைப் போலவே, பாலி பகுதியில் மற்றொரு போயிங் விமானமும் உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள ஒருவர், வாங்கி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பார்வையாளர்கள் பார்த்து செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.
பாலி பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக போயிங் விமானம் நிற்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அது எப்படி அங்கே வந்தது என்பது அப்பகுதி மக்களுக்கே தெரியாமல் இருக்கும் சம்பவம், பலரையும் குழப்பத்திலும் அதே வேளையில் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.