"மணமகன் விற்பனைக்கு?!.." 700 வருஷமா FOLLOW பண்ணும் சுவாரஸ்ய 'சடங்கு'.. வைரலாகும் மாப்பிள்ளை மார்க்கெட்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, இந்தியாவில் சந்தை ஒன்று இருப்பது தொடர்பான செய்தி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
![bihar groom market old tradition followed for 700 years bihar groom market old tradition followed for 700 years](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/bihar-groom-market-old-tradition-followed-for-700-years.jpg)
Also Read | பல வருசமா நிலப் பகுதியில் நிற்கும் விமானம்.. "ஆனா, அந்த ஒரு விஷயம் தான் இன்னும் மர்மமாவே இருக்கு.."
பண்டைய காலங்களில் பெண்களை வைத்து, சுயம்வரம் நடப்பது தொடர்பாக, நாம் நிறைய புத்தகங்கள் அல்லது திரைப்படங்களில் பார்த்து தெரிந்திருப்போம்.
ஆனால், அதே பாணியில் ஆண்களை வரிசைப்படுத்தி, மாப்பிள்ளை தேர்வு செய்யும் நிகழ்வு, கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் கடை பிடிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பீகாரில் உள்ள மதுபனி என்னும் மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு சவுரத் சபா என்றும் அவர்கள் பெயரிட்டு இருக்கிறார்கள். அதாவது மாப்பிள்ளை மார்க்கெட் என்பது தான் அதனுடைய அர்த்தம்.
இந்த நிகழ்வில் மாப்பிள்ளை அனைவரும், வேஷ்டி மற்றும் குர்தா அல்லது ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்தபடி இருக்க வேண்டும். மேலும், அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு மாப்பிள்ளைகளுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மணமகனை தேர்வு செய்வதற்கு முன்பு, பெண் வீட்டார் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையின் படிப்பு, குடும்ப பின்னணி உள்ளிட்ட தகவல்களை சரி பார்த்த பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வார்கள்.
அதே போல, பெண் ஒருவருக்கு மாப்பிள்ளை பிடித்து போய் சரியானவர் என தேர்வு செய்து விட்டால், ஆண் வீட்டார் தான் திருமண பேச்சை முதலில் தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஏழு தலைமுறைகளுக்கும் இரத்த பந்தம் இருந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் என்ற விதியும் உள்ளது.
சவுரத் சபா எனப்படும் இந்த மணமகன் மார்க்கெட், கர்நாத் பரம்பரையை சேர்ந்த ராஜா ஹரிசிங் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சவுரத் சபா என்பது, பெண்கள் தங்களுக்கான கணவனை தேர்வு செய்ய எளிமையான ஒரு வழியாக இருந்தாலும், வரதட்சணை முறையை ஒழிப்பதற்காகவே முந்தைய காலத்தில் இது தொடங்கப்பட்டதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இதற்காக மதுபனி மாவட்டத்தின் உள்ளூர் சந்தை பகுதிகளில் உள்ள மரங்களின் கீழ் தான், குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் கூடி, இது தொடர்பான நிகழ்வில் ஈடுபடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த சவுரத் மேளா அல்லது சபாகச்சி என அழைக்கப்படும் நிகழ்வில், மதுபனியில் உள்ள பழ தோட்டத்தில், மாப்பிள்ளை மார்க்கெட் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பீகாரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள், மதுபானியில் நடக்கும் இந்த மாப்பிள்ளை மார்க்கெட்டில் பங்கேற்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே போல, மணப்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டால், திருமணம் தொடர்பான சடங்குகளை பதிவாளர்களை கொண்டும் முடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மாப்பிள்ளையை தேர்வு செய்யும் மாப்பிள்ளை மார்க்கெட் என்ற பழமையான சடங்கு குறித்த செய்தி, அதிகம் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)