கோலியோட ‘100-வது’ டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள ‘சூப்பர்’ ப்ளான்?.. இதுமட்டும் நடந்த வேறலெவலா இருக்குமே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி விளையாட உள்ள 100-வது டெஸ்ட் போட்டிக்கு பிசிசிஐ சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் அணிகள்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதனை அடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அட்டவணைகள் மாற வாய்ப்பு
இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25-ம் தேதியும், டி20 தொடர் வரும் மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரனோ பாதுகாப்பு காரணமாக முதலில் டி20 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டி20 போட்டிகள் தர்மசாலா, மொஹாலி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் முதலில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதுகாப்பு காரணமாக மொகாலி மற்றும் தர்மசாலா ஆகிய 2 இடங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி
இதில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி. அதனால் இதை அவர் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடந்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் போட்டியை பெங்களூரில் பகல்-இரவு ஆட்டமாக நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முன்னதாக நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார். மேலும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் விளையாட உள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகலிரவு போட்டி வெற்றிகள்
இந்திய அணி இரண்டு முறை பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
