அந்தமாதிரி படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகம்.. நள்ளிரவில் கணவன் செய்த விபரீதம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் ஆபாச படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஜாஹீர் பாஷா. இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் அடிக்கடி ஜாஹீர் பாஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.
சண்டை
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியை ஜாஹீர் தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் ஜாஹீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் சண்டையிட கூடாது என அறிவுரை கூறி சென்றிருக்கின்றனர். ஆனால் அதே காரணத்திற்காக அதன்பின்னரும் ஜாஹீர் தனது மனைவியை தாக்கவே பெண்ணுடைய தந்தை காவல்துறையில் புகாரளிக்க முடிவெடுத்துள்ளார் அப்போது அந்தப் பெண் வேண்டாமென்று தடுத்ததால் அந்த முயற்சியை அவர் கைவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிமுடித்து வீட்டிற்கு வந்த ஜாஹீர் பாஷா தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஒருகட்டத்தில் கோபமடைந்த பாஷா தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
விசாரணை
இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு ஓடிச்சென்ற பாஷாவின் மூத்த மகன், தனது தாத்தாவிடம் நடந்ததை கூறியுள்ளார். அவர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு அவரை கணவர் கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
