'யார் அப்ளை பண்ணுனா என்ன'... 'இவருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்குமோ'?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 13, 2019 10:42 AM
இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல், வரும் சுதந்திர தினத்துக்கு பின் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவருடைய பதவி காலத்தில் இந்திய அணி பல முக்கிய வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியுசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6பேரை தேர்வு செய்துள்ளது.
இவர்களில் இருந்து ஒருவரை கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்பார்கள். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தேர்வு இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.