டஃப் எதுவும் கொடுக்கல...! 'ரொம்ப ஈசியா ஜெய்த்த விஜய் வசந்த்...' - அதிகபட்சமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த ஏப்ரல் 6ஆ-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை திமுக கட்சியே முன்னிலையில் உள்ளது.

அதோடு ஒரு சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளராக அறிவிக்கவும் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று தெரியவந்துள்ளது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த்தும் அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர்.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 11,7099 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வெற்றியை உறுதி செய்துள்ளார்.
கடந்த முறை மறைந்த எம்.பி வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது மீண்டும் தோல்வி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
