‘இந்த’ ஆப்ஸ் எல்லாம் மொபைல் போன்ல இருக்கா? உடனே ‘டெலிட்’ பண்ணிடுங்க..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் சில ஆப்ஸ்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என மொபைல் செக்யூரிட்டி நிறுவனமான ப்ரடேயோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள புது வரவு ஆப்ஸ்களை குறிவைத்து ‘ஜோக்கர்’ என்னும் மால்வேர் தாக்கி வருகிறது. ஏற்கெனவே சுமார் 15 ஆப்ஸ்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் தாக்கி உள்ளது இந்த ஜோக்கர் மால்வேர். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள தரமான ஆண்ட்ராய்டு ஆபஸ்களைக் கூட இந்த மால்வேர் தாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இந்த ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களின் பெயரில் இந்த ஜோக்கர் மால்வேர், மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே கூகுள் செக்யூரிட்டு இந்த மால்வேரை விரட்டிவிட்டு இருந்தது. அது மீண்டும் உள் நுழையாதவாறு பாதுகாப்பும் கூகுள் சார்பில் பலப்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது மீண்டும் கூகுள் செக்யூரிட்டியை உடைத்துக் கொண்டு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது ‘ஜோக்கர்’ மால்வேர். சமீபத்தில் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கஸ்பெர்ஸ்கி சார்பில் இந்த ஜோக்கர் மால்வேர் சுமார் 14 கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்ஸ்களை பதம் பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதன் முறையாக இந்த மால்வேர் கூகுளால் அடையாளம் காணப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரையில் கூகுள் செக்யூரிட்டிக்கே இந்த மால்வேர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறது. ஜோக்கர் மால்வேரின் சமீபத்திய தாக்குதல், ‘color Message’ என்னும் ஆப் மேல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆப் சுமார் 5 லட்சம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ப்ர்டேயோ மொபைல் செக்யூரிட்டி நிறுவனத்தின் அறிக்கையில் அடிப்படையில் இந்த மால்வேர் ரஷ்ய செர்வர்கள் உடனான தொடர்பை காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ‘ஜோக்கர்’ மால்வேர் ஆண்ட்ராய்டு போனில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியுமா? மொபைல் மூலமாகவே அந்த மொபைல் உரிமையாளரின் பணத்தைக் களவாடுதல், அநாவசிய சப்ஸ்க்ரிப்ஷன்களை உரிமையாளருக்கே தெரியாமல் மேற்கொள்ளுதல், ஆன்லைன் விளம்பரங்களுக்கு பணம் நம்மை அறியாமலேயே எடுக்கப்பட்டு விடும். நமது மொபைலுக்கு வரும் OTP-களை நமக்குத் தெரியாமலேயே பயன்படுத்தும் திறன் கொண்டது இந்த ‘ஜோக்கர்’ மால்வேர்.
நீங்களாக உங்கள் வங்கி பணப்பரிவர்த்தனைகளை சென்று பரிசோதித்தால் மட்டுமே உங்களால் எவ்வளவு பணம் திருடப்பட்டு உள்ளது என்பதையே அறிந்து கொள்ள முடியும். இந்த மால்வேர் தாக்குதல் நடத்திய ஆப்ஸ்களை உடனடியாக மொபைலில் இருந்து டெலிட் செய்ய வேண்டும். Color Message, Safety Applock, convenient scanner 2, push message- texting& sms, emoji wallpaper, separate Doc scanner, Fingertip Gamebox ஆகிய ஆப்ஸ்களை உடனடியாக உங்கள் மொபைலில் இருந்து டெலிட் செய்யுங்கள்.

மற்ற செய்திகள்
