படிப்ப நிறுத்திடவா தாத்தா...? 'பேத்தியை பி.எட் படிக்க வைக்க...' - ஒரு வருசமா ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் தாத்தா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜ். தனது இரு மகன்களையும் இழந்த பிறகு, மனைவி, மருமகள், மற்றும் 4 பேரப் பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வந்தார்.
தனது குடும்ப நலனுக்காக, முதுமையிலும் அயராது பாடுபடும் தேஸ்ராஜ், காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார். தனது தாத்தாவின் கஷ்டத்தைக் கண்டு மனமுடைந்த அவர் பேத்தி, நான் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அந்த கேள்வியைச் சற்றும் எதிர்பாராத தேஸ்ராஜ், பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும், விரும்பிய படிப்பினை படிக்கலாம் என்றும் பேத்திக்கு உறுதியளித்தார். தேஸ்ராஜின் பேத்திக்கு பி.எட் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதனைத்தொடர்ந்து, தங்கியிருந்த வீட்டையும் விற்று ,தனது அன்பு பேத்தியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தேஸ்ராஜ், தனது குடும்ப உறுப்பினர்களை உறவினர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். மும்பையில் ஆட்டோவே அவருக்கு வீடாகிப் போனது. தனது ஆட்டோவில் வாழ தொடங்கினர்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆட்டோவில் வாழ்க்கை ஓடிவிட, அண்மையில் தேஸ்ராஜின் கதை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து பலரும் ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜை பாராட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சுமார் 5.3 லட்சம் ரூபாய் தேஸ்ராஜின் குடும்பத்திற்காக நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.