“110 வருஷத்துக்கு முன்னாடி சாய்பாபா இதான் பண்ணாரு!”.. ‘இத தாண்டி கொரோனா வராது’.. திருச்சி பக்தர்கள் செய்த விநோத காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா மூச்சுக்காற்று மற்றும் தொடுதலினால் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.
![wheat Fence in road to restrict corona entry, trichy sai baba devotees wheat Fence in road to restrict corona entry, trichy sai baba devotees](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/wheat-fence-in-road-to-restrict-corona-entry-trichy-sai-baba-devotees.jpg)
இந்த நோயை கட்டுப்படுத்த மருந்துகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரும் நிலையில், மருந்துகள் வரும்வரையில் அனைவரும் நம்பி இருக்கும் தடுப்பு வழிமுறைகளாக, தனிமனித இடைவெளி, சமூக இடைவெளி, மாஸ்க் அணித, வீட்டுக்குள்ளேயே முடங்கி இருத்தல், தனித்திருத்தல், சானிட்டைஸர் பயன்படுத்துதல், கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவையே இப்போதைக்கு கண்முன் இருக்கின்றன.
இந்நிலையில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள கீழக்கல்லுக்குடியில் சாய்பாபா கோவில் நிர்வாகிகள் சிலர், கோதுமை மாவை திரித்து, கொரோனாவைத் தடுக்கும் விதமாக சாலைகளில் பாதுகாப்புக் கோடுகளை போட்டுள்ளனர். இதுபற்றி பேசிய இவர்கள், 110 ஆண்டுகளுக்கு முன்னர் சாய்பாபா இருந்த ஊரில், அவர் இதேபோன்று கோதுமை மாவை திரித்து கோடு போட்டதால் காலரா ஒழிந்ததாக, ஒரு புத்தகத்தில் படித்ததாகவும் அதனால் தாங்கள் அதையே பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)