பாண்டியாவின் மிரட்டலான கேட்ச்.. திகைச்சுப்போய் நின்ன பேட்ஸ்மேன்.. தெறி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 22, 2023 04:23 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா எடுத்த கேட்ச் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Hardik Pandya takes a stunning catch to dismiss Conway

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களை ஆடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே முதலாவதாக ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் நேற்று ராய்ப்பூரில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் டக்கில் வெளியேற அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதன் காரணமாக அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த அணியின் பவுலிங்கை பொறுத்தவரையில் ஷமி 3 விக்கெட்களையும், பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களையும் சிராஜ், தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது 10 வது ஓவரை பாண்டியா வீசினார். அப்போது கான்வே ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்தார். அந்த ஓவரின் 4-வது பந்தை கான்வே நேராக ஆட முயன்றார். ஆனால், தரையோடு தரையாக அடிக்கப்பட்ட பந்தை கட்சிதமாக கேட்ச் எடுத்தார் பாண்டியா. இதனை கான்வே திகைத்து சில வினாடிகள் பார்த்துக்கொண்டு நிற்க இந்திய அணி வீரர்கள் பாண்டியாவவை பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Tags : #HARDIK PANDYA #INDIA VS NEW ZEALAND #CRICKET #2ND ODI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hardik Pandya takes a stunning catch to dismiss Conway | Sports News.