கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் விபத்து.. தமிழ்நாட்டையே கலங்க வைத்த சோகம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 23, 2023 10:29 AM

கோவில் திருவிழா ஒன்றில் நடந்த எதிர்பாராத சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Ranipet temple festival crane accident people fear

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாண்டியாவின் மிரட்டலான கேட்ச்.. திகைச்சுப்போய் நின்ன பேட்ஸ்மேன்.. தெறி வீடியோ..!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் கீழவீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே திருவிழா நடைபெற்று வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது

இந்த விழாவில் பங்கேற்க, அந்த ஊரை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமீபத்தில் மயிலேறு திருவிழா நடைபெற்றதாகவும் தெரிகிறது. அதே போல, இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி ஊர்வலம் புறப்பட்டு இருந்த சூழலில், பக்தர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிரேனில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவிக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில் யாரும் எதிர்ப்பாராத விதமாக திடீரென கிரேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் பதறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓடவும் செய்திருந்தனர். இந்த விபத்தில் ஏராளமானனோர் படுகாயம் அடைந்த நிலையில், பலரையும் மீட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதில் கீழ் விதி கிராமத்தை சேர்ந்த முத்து, அரக்கோணம் அடுத்த கீழ்ஆவது கிராமத்தை சேர்ந்த பூபாலன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்னும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | அப்பாவையே அசர வைத்த லிடியன் நாதஸ்வரம்.. அதுவும் இசைஞானி பாட்டுக்கு.. செம வீடியோ..!

Tags : #RANIPET TEMPLE #RANIPET TEMPLE FESTIVAL #RANIPET TEMPLE FESTIVAL CRANE ACCIDENT

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ranipet temple festival crane accident people fear | Tamil Nadu News.