'கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி பண்ணி வாட்ஸ்ஆப்ல அனுப்பிட்டு...' 'தற்கொலை செய்த இளைஞர்...' என்ன காரணம்...? - ரகசியமாக இறுதி சடங்கு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 23, 2020 11:31 AM

19 வயதான இளைஞர் ஒருவர் தான் இறப்பதற்கு முன் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tn puthukottai 19 yr boy condolence poster before he died

புதுக்கோட்டை மாவட்டதில் தனியார் கல்லூரியில் ஐடிஐ 2ஆம் ஆண்டு படித்து வருபவர் 19 வயதான சதீஷ்குமார். இவர் தன் குடும்பத்தாரோடு ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில வாக்குவாதம் காரணமாக சதீஷை அவரது தந்தையும், அண்ணனும் திட்டியும் அடித்தும் உள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தற்கொலை என்ற ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார்.

அன்றிரவே வீட்டை வீட்டு வெளியேறிய சதீஸ்குமார் தன்  போட்டோ வைத்து செல்போனில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, தன் நெருங்கிய 4 நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், சதீஷை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் எவ்வித பலனும் அளிக்காததால் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சதீஷின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்த ஒரு நாள் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் சதீஸ்குமார், அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். மேலும் யாருக்கும் தெரியாமல் சதிஷிற்கு உருமநாதபுரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி, போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn puthukottai 19 yr boy condolence poster before he died | Tamil Nadu News.