'விலைக்கு வாங்கிய செகண்ட் ஹேண்ட் காரை, ஆபீஸ் பார்க்கிங்கில் விட்ட நபர்!'.. 'திரும்பி போய் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவைச் சேர்ந்த 28 வயது நபர் சொந்த காரையே திருடிய மோசடியில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜீத் யாதவ் என்கிற நபர், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் விஎக்ஸ்ஐ விற்பனைக்கு வந்த விளம்பரத்தைக் கண்டார். உடனே விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ரூ 2.60 லட்சம் ரூபாய் தந்து காரை வாங்கிக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
விற்பனையாளரான மனோட்டம் தியாகி என்பவரை ஜீத் சந்தித்தபோது, ரூ.2.10 லட்சத்தை அங்கேயே வைத்து கொடுத்துள்ளார். அப்போது வாகனத்தின்பதிவு ஆவண நகல் மற்றும் வாகனத்தின் ஒரு சாவியை மட்டும் ஜீத்திடம் கொடுத்துவிட்டு, மீதமிருக்கும் வாகனத்தின்பதிவு ஆவணத்தின் அசல் மற்றும் இன்னொரு சாவி இரண்டையும் பின்னர் தருவதாக சொல்லி, அப்போது மீதி பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் மனோட்டம் தியாகி, ஜீத் யாதவுக்கு உறுதியளித்தார்.
இதனை நம்பி அடுத்த நாள், யாதவ் வேலைக்குச் சென்றபோது, அவரது கார் தனது அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது திருடப்பட்டது. இதுபற்றி பின்னர், போலீஸ் விசாரிக்கும்போது, காரில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு சாதனத்தை பொருத்திவிட்டு, அதன் நகர்வுகளை தியாகி கண்காணித்து வந்தார் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர் தன்னிடம் வைத்திருந்த இன்னொரு சாவியைப் பயன்படுத்தி காரைத் திருடியதும், இதற்கு முன்னர் இந்த நபர் இதே பாணியில் பலரை ஏமாற்றியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.