‘மருத்துவ படிப்பு, நீட் விவகாரத்தில் .. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரிய தமிழக அரசு!’ - தமிழக ஆளுநர் ‘அதிரடி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கான கோரிக்கை கவர்னர் ஒப்புதலுக்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே இந்த மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
#TNGovernor gives his assent to 7.5 per cent quota Act. The legal opinion on this was received only yesterday, says Raj Bhavan #TNGovt pic.twitter.com/a7uRGyMekK
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) October 30, 2020
இதுபற்றி ட்விட்டர் பதிவில், சமூக நீதி காக்கவும், நீட் தேர்ச்சி பெற்ற, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பினால் ஓராண்டுக்கு மட்டும் நடைபெறும் இலவச நீட் பயிற்சி 2 ஆண்டாக நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.