"வேலைய விட்டு தூக்குவாரா??.." கோபத்தில் கிரேனுடன் முதலாளி வீட்டுக்கு கிளம்பிய ஊழியர்.. அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் அமைந்துள்ள பல நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை தேவைப்படும் நேரத்தில் பணி நீக்கம் செய்வது என்பது, அதிகம் நடந்து வரும் நிகழ்வாகவே இருந்து வருகிறது.
Also Read | "சரியா தூக்கமே வரல.." 10 வருசமா துபாயில் கூலி வேலை.. ஒரே நாளில் தலைகீழான இந்தியரின் வாழ்க்கை
அதிலும், கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில், நிதி நெருக்கடி காரணமாக, பல முன்னணி நிறுவனங்கள் கூட, கொத்து கொத்தாக தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
மேலும், சில நிறுவனங்கள் முன் அறிவிப்பு ஒன்றுடன் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினாலும், சில நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென்றும் தங்களின் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருந்தது.
இதனால், சம்மந்தப்பட்ட ஊழியர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கான வழிகளை திடீரென இழக்க நேரிடுவதால், அடுத்து என்ன செய்வது என்பது கூட தெரியாமல் கலங்கி போவார்கள். இதன் காரணமாக, தங்களின் நிறுவனங்களின் மீது விரக்தியில் இருக்கும் நபர்கள், ஏதாவது விபரீத நிகழ்வுகளில் ஈடுபடுவது பற்றி நாம் நிறைய கேட்டிருப்போம்.
அந்த வகையில், தற்போது விரக்தியில் இருந்த ஊழியர் செய்துள்ள சம்பவம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி, பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ என்னும் பகுதியைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து, அதன் முதலாளி வேலையை விட்டு தூக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரக்தியுடன் இருந்த அந்த ஊழியர், முஸ்கோகா என்னும் ஏரிப்பகுதி அருகே இருந்த தனது முதலாளியின் பங்களாவிற்கு கிரேன் ஒன்றுடன் சென்றுள்ளார். தொடர்ந்து, முதலாளி வீட்டை கிரேன் கொண்டு இடிக்கத் தொடங்கிய அந்த நபரை அப்பகுதியில் இருந்தவர், வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 59 வயதான பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் அவருக்கு சுமார் 5000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் ஆஜராகும் படியும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசும் அந்த நிறுவனத்தின் முதலாளி, அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இந்த சேதங்களை சரி செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலையை விட்டு தன்னை நீக்கியதால், நிறுவனத்தின் முதலாளியின் வீட்டை கிரேன் கொண்டு தொழிலாளி இடித்து சேதப்படுத்தும் வீடியோ குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | ஐடி வேலையை விட்டுட்டு கழுதை வளர்க்க போன நபர்.. கைகொடுத்த தொழில்.. மனுஷன் இப்போ லட்சாதிபதி..!