இந்த போன்ல 'WEDDING SHOOT'-ஆ.?.. குசும்புக்கும் ஒரு அளவில்லையா?.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஒன்றில் மணமக்களை ஒருவர் விழுந்து விருந்து புகைப்படம் எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
320 அப்ளிகேஷன்களுக்கு ஆப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!
போட்டோ ஷூட்
திருமணங்களில் போட்டோ ஷூட் நடத்துவது தற்போது சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. கேஷுவல் கிளிக் துவங்கி புகைப்படங்கள் எடுக்கப்படும் முறைகளும், கோணங்களும் அதற்காக உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் வேறு உயரத்திற்கு சென்றுவிட்டன. 'ப்ரீ வெட்டிங் ஷூட்' போன்ற நடைமுறைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் கால்பதித்து விட்டன. ஆனால், தற்போது வைரலாகி கொண்டிருக்கும் வீடியோவில் ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்.
செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாதா? என கேள்வி எழலாம். ஆனால், அதற்கு மொபைல் போனில் கேமரா இருக்க வேண்டுமே? ஆம். கேமரா இல்லாத தனது பேசிக் மொபைல் போனில் புகைப்படம் எடுப்பதுபோல, அந்த நபரும் வளைத்து வளைத்து ஆங்கிள் பார்க்க, மணமக்களும் சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கின்றனர்.
ஒருபக்கம் டிஜிட்டல் கேமராக்களுடன் புகைப்பட நிபுணர்கள் மனமேடையை சுற்றி பரபரப்புடன் வலம் வந்துகொண்டிருக்க, இந்த நபர் அனைவரையும் புறந்தள்ளி தன்னுடைய போனில் போட்டா பிடிக்க ஆர்வமாக இயங்கும் இந்த வீடியோவை சிரிக்காமல் பார்க்க முடியாது போலிருக்கிறது.
அந்த போனை காட்டுங்க ..
வீடியோவின் இறுதியில் மணமக்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நபரை அருகில் அழைக்கும் புகைப்பட கலைஞர் ஒருவர், அவருடைய மொபைல் போனை காட்டுமாறு தெரிவிக்க, அவரும் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து பட்டன் போனை எடுத்து கையில் கொடுக்கிறார்.
அதனை இருபுறமும் திருப்பி பார்த்துவிட்டு, மீண்டும் அவரிடமே போனை ஒப்படைத்து விடுகிறார் புகைப்பட கலைஞர். எந்த ஊரில் நடந்த திருமணம் இது எனத் தெரியவில்லை. ஆனால், மணமக்களை தனது பட்டன் போனில் படம் பிடிக்க போராடும் நபரின் விடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
"கோவிலில் விஐபி வரிசை.. கடவுளே மன்னிக்கமாட்டாரு".. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி போட்ட உத்தரவு..!