கபடி, டான்ஸ்... இப்ப குத்துச் சண்டை.. ட்ரெண்டிங்கில் ' 'அமைச்சர்' & நடிகை ரோஜா!!
முகப்பு > செய்திகள் > இந்தியா90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் ரோஜா.
மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் ரோஜா, அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில் நடைபெற்ற ஜெகன்னா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட், வாலிபால் விளையாடினார். இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
அதே போல, வடமலைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது சகோதரர் ராம்பிரசாத்துடன் கைப்பந்து போட்டிகளை துவங்கி வைத்த அமைச்சர் ரோஜா, மாணவர்களுடன் வாலிபால் ஆடவும் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது.
அந்த வகையில் தற்போது அமைச்ச ரோஜா குத்து சண்டை போடும் வீடியோக்களும் அதிகம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் பன்னிரண்டாவது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிலருடன் குத்துச்சண்டை விளையாடவும் செய்தார் அமைச்சர் ரோஜா. மேடையில் ஏறி, மற்றவர்களுடன் சண்டை போடுவது போல ரோஜா குத்து சண்டை விளையாடியது தொடர்பான நிகழ்வு, அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அமைச்சராக இருந்த போதிலும் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக பண்புடன் ஈடுபட்டு வரும் அமைச்சர் ரோஜாவின் செயல்பாடுகளும் அதிக கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
