"பல வருஷமா இது நடந்திருக்கு".. 72 வயது பெண் வழக்கறிஞர் மீது வந்த சந்தேகம்.. இந்தியாவையே புரட்டிப்போட்ட சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பல வருடங்களாக வழக்கறிஞராக பணிபுரிந்துவந்த 72 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது அந்த மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்
மகாராஷ்டிரா மாநிலம் போரிவிலி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அக்பரலி முகமது கான். 44 வயதான இவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவரும் மந்தாகினி காஷிநாத் சோஹினி (எ) மொர்டேகாய் ரெபேக்கா ஜூப் என்ற பெண் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்ற மந்தாகினி தன்னுடைய வழக்கறிஞர் உரிமம், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்.
அப்போது அதனை ஆராய்ந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். காரணம் அந்த பெண்மணி சமர்ப்பித்த உரிமம் சோலாப்பூரைச் சேர்ந்த கன்பேஷ்வர் பாண்டிரிநாத் யஷ்வந்த் என்னும் வழக்கறிஞருடையது. இதனையடுத்து, இதுகுறித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலுக்கு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். அதில் மந்தாகினியின் உரிமத்தை பரிசோதிக்குமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
போலி ஆவணங்கள்
இதுகுறித்து பேசிய அக்பரலி,"குற்றம் சாட்டப்பட்ட பெண் 1977 இல் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் பயின்றார். சரியான பட்டம் இல்லாவிட்டாலும், குடும்ப மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் உட்பட மும்பையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அவர் பயிற்சி செய்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அவரது போலியான ஆவணங்கள் குறித்து நான் அறிந்தேன். அப்போதிருந்து, நான் அவரை கண்காணித்துவந்தேன். நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டி சட்டம் பயின்று வக்கீல் ஆனேன். இது போன்ற போலி நபர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். பார் கவுன்சில் அவ்வப்போது வழங்கறிஞர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்" என்றார்.
கைது
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,"குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். அவரை செப்டம்பர் 20ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பல வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்த 72 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
