"ஒரு கப் TEA-காகவா அப்படி பண்ணாரு??.." ஆத்திரத்தில் மாமனார் செய்த அதிர்ச்சி செயல்.? மருமகளுக்கு நேர்ந்த துயரம்.. இன்னொரு மருமகள் பரபரப்பு புகார்
முகப்பு > செய்திகள் > இந்தியாமாமனாருக்கு வந்த ஆத்திரத்தில், மருமகளுக்கு நேர்ந்துள்ள துயரம், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானேவை அடுத்த ரபோடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாட்டீல். இவருக்கு வயது 76.
இவரது மருமகள் ஒருவருக்கும் தற்போது 42 வயதாகிறது. வழக்கமாக, காசிநாத்திற்கு அவருடைய மருமகள் தான் காலை உணவுகளை அளித்து வருவதை பழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
காலை உணவு பெயரில் கோபம்?
அப்படி இருக்கும் நிலையில், காலை உணவுடன் சேர்த்து தேநீரை, காசிநாத்துக்கு அன்றைய தினம் மருமகள் கொடுக்கவில்லை என தெரிகிறது. அது மட்டுமில்லாமல், உணவு கொடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பெயரில் கடும் கோபம் அடைந்துள்ளார் காசிநாத். பின்னர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருமகளின் வயிற்றுப் பகுதியிலும், காசிநாத் சுட்டதாக கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத மருமகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மருமகளை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம், அவரின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாயமான மாமனார்
காசிநாத்தின் செயல் குறித்து, அவரின் இன்னொரு மருமகள் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தொடர்ந்து, காசிநாத் மீது சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, மருமகளை துப்பாக்கியால் சுட்ட காசிநாத், அதன் பின்னர் மாயமானார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் சொன்னது என்ன?
அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது பற்றி போலீசார் தரப்பில், "காசிநாத் மருமகளை துப்பாக்கியால் சுட்ட போது, அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். அவர் இப்படி செய்ததும், உடனடியாக அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார். காசிநாத்திடம் இருந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருந்துள்ளது. தற்போது தப்பித்துச் சென்ற அவரை, குழுக்கள் அமைத்து தேடி வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிநாத் மருமகளை சுட்டதன் பின்னால், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை உணவுடன் தேநீர் கொடுக்காததால், மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
