எங்க கடைல ‘டீ’ இன்னைக்கு வெறும் ‘ஒரு’ ரூபாய் தான்... திருவள்ளுவர் தினத்திற்கு என்ன செய்தார் தெரியுமா...? கலக்கிய டீக்கடைக்காரர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு ரூபாய்க்கு தேனீரும், சிறியவர்களுக்கு திருக்குறள் புத்தகமும், பெரியவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி திருவள்ளுவர் தினத்தை கலக்கிய டீக்கடை உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவள்ளுவர் தினத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே உள்ள பரவக்கோட்டையில் உள்ள சிட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அப்பகுதியில் சத்யா என்ற பெயரில் டீக்கடை வைத்திருக்கும் சத்தியா அடைக்கலம் ஆகிய இருவரும் சேர்ந்து திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டும் வகையிலும், சுற்றுச்சூழலை காக்கும் விதத்திலும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோருக்கு திருக்குறள் புத்தகமும், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளும் வழங்கினர்.
மேலும் சத்தியா டீக்கடை உரிமையாளர் சத்திய அடைக்கலம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது கடைக்கு தேநீர் குடிக்க வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரூபாய்க்கு தேனீர் வழங்கி திருவள்ளுவர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினார். மேலும் இவர்களது செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
